தேவையான பொருட்கள்
- வாழைப்பூ
- இட்லி மாவு
- பாசிப்பருப்பு
- கடுகு
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, நான்கு ஸ்பூன் பாசிப்பருப்பு, 1/2 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின், 1/2 கப் பொடியாக நறுக்கிய வாழைப்பூ சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
வதங்கிய பின், வாழைப்பூவை ஒரு கப் தோசை மாவுடன் சேர்த்து மேலும் தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
பின், தோசைக் கல்லில் ஊற்றி தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
