தேவையான பொருட்கள்
- மட்டன்
- சீரக சம்பா அரிசி
- தக்காளி
- சின்ன வெங்காயம்
- பச்சை மிளகாய்
- காய்ந்த மிளகாய்
- இஞ்சி
- பூண்டு
- சோம்பு
- பட்டை
- இலவங்கம்
- அன்னாசி பூ
- பிரியாணி இலை
- ஏலக்காய்
- எலுமிச்சை சாறு
- தயிர்
- எண்ணெய்
- நெய்
- உப்பு
- புதினா
- கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில், 10 பல் பூண்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி இரண்டு ஸ்பூன், இரண்டு பச்சை மிளகாய், நான்கு காய்ந்த மிளகாய், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு தக்காளி சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.
குக்கரில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, இரண்டு ஏலக்காய், ஒரு பட்டை, இலவங்கம், அன்னாசி பூ, பிரியாணி இலை, 1/4 கப் நறுக்கிய சின்ன வெங்காயம், அரைத்து வைத்துள்ள மசாலா, இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின், பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி, ஒரு கைப்பிடி புதினா, ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை, இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு, நான்கு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு வதக்கவும்.
வதங்கிய பின், 200 கிராம் மட்டன் சேர்த்து பத்து நிமிடம் வதக்கவும்.
பின்னர், 30 நிமிடம் ஊற வைத்த சீரக சம்பா அரிசி, நான்கு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு இரண்டு விசில் விடவும்.
இறுதியாக, தேவையான அளவு நெய் சேர்த்து கலந்து விடவும்.
