ஆம்பூர் சிக்கன் பிரியாணி


தேவையான பொருட்கள் 

  • சிக்கன் 
  • சீரக சம்பா அரிசி 
  • பெரிய வெங்காயம் 
  • தக்காளி 
  • பச்சை மிளகாய் 
  • மிளகாய் தூள் 
  • மஞ்சள் தூள் 
  • பட்டை 
  • இலவங்கம் 
  • சோம்பு 
  • பிரியாணி இலை 
  • ஏலக்காய்
  • இஞ்சி-பூண்டு விழுது 
  • தயிர் 
  • எலுமிச்சை சாறு 
  • நெய் 
  • எண்ணெய் 
  • உப்பு 
  • புதினா 
  • கொத்தமல்லி இலை 


செய்முறை 

முதலில், 300 கிராம் சீரக சம்பா அரிசியை 30 நிமிடம் ஊற வைத்து பாதி அளவு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

பின், அடி கனமான பாத்திரத்தில், ஐந்து ஸ்பூன் நெய், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, இரண்டு ஏலக்காய், ஒரு பட்டை, இரண்டு இலவங்கம் சேர்த்து பொரிந்தவுடன் மெல்லிசாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், இரண்டு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, நான்கு பச்சை மிளகாய், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், பொடியாக நறுக்கிய மூன்று தக்காளி சேர்த்து வதக்கவும். 

பின்னர், 300 கிராம் சிக்கன், இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள், இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு, நான்கு ஸ்பூன் தயிர் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். மேலும், ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு ஸ்பூன் உப்பு, ஒரு கைப்பிடி புதினா, ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை சேர்த்து பத்து நிமிடம் வேக வைக்கவும். 

பின், பாதி அளவு வேக வைத்துள்ள அரிசி சேர்த்து கலந்து விட்டு நான்கு ஸ்பூன் நெய், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு பத்து நிமிடம் தம் போடவும்.

Previous Post Next Post