தேவையான பொருட்கள்
- காபி தூள்
- சர்க்கரை
- பால்
- தண்ணீர்
செய்முறை
முதலில், ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும்.
காபி ஃபில்டரில், நான்கு ஸ்பூன் காபி தூள், 1/2 டம்ளர் சுடு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து விடவும்.
பின், பாத்திரத்தில், ஒரு டம்ளர் பால், 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து காய்ச்சவும்.
காய்ச்சிய பாலுடன், தேவையான அளவு சர்க்கரை, ஃபில்டரில் வடிகட்டிய டிகாஷன் நான்கு ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
