பரோட்டா-முட்டை வறுவல்


தேவையான பொருட்கள் 

  • பரோட்டா 
  • முட்டை 
  • பெரிய வெங்காயம் 
  • தக்காளி 
  • பச்சை மிளகாய் 
  • இஞ்சி-பூண்டு விழுது 
  • கறி மசாலா தூள் 
  • மிளகாய் தூள் 
  • மிளகுத்தூள்
  • மஞ்சள் தூள்
  • சோம்பு 
  • உப்பு 
  • எண்ணெய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 


செய்முறை

முதலில், இரண்டு பரோட்டாவை பொடியாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். 

கடாயில், 20 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, 1/4 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். 

பின்னர், இரண்டு முட்டை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். 

இதனுடன், தயார் செய்து வைத்துள்ள பரோட்டா, தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கிளறவும். 

இறுதியாக, சிறிதளவு கொத்தமல்லி இலை, ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து கலந்து விடவும்.

Previous Post Next Post