தேவையான பொருட்கள்
- சப்பாத்தி
- முட்டை
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- மிளகுத்தூள்
- டொமேட்டோ சாஸ்
- ரெட் சில்லி சாஸ்
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
பாத்திரத்தில், பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு இரண்டு முட்டையை உடைத்து சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின், தயார் செய்து வைத்துள்ள முட்டையை தோசைக்கல்லில் ஊற்றி, தேவையான அளவு எண்ணெய், 1/2 ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து வேக வைக்கவும்.
பின்னர், சப்பாத்தி மேல் ஒரு ஸ்பூன் டொமேட்டோ சாஸ், ஒரு ஸ்பூன் ரெட் சில்லி சாஸ் தடவி தயார் செய்து வைத்துள்ள ஆம்லெட் வைத்து ரோல் செய்யவும்.
