வரகு அரிசி வெஜிடபிள் புட்டு

தேவையான பொருட்கள் 

  • வரகு அரிசி 
  • தேங்காய் 
  • கேரட் 
  • பீன்ஸ் 
  • பச்சை பட்டாணி
  • பெரிய வெங்காயம் 
  • பச்சை மிளகாய் 
  • கடலைப்பருப்பு
  • மஞ்சள் தூள்
  • மிளகாய் தூள்
  • சோம்பு
  • முந்திரி
  • நெய் 
  • உப்பு 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை

செய்முறை 

200 கிராம் வரகு அரிசியை 5 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை முழுவதுமாக துணியில் கட்டி வடித்து விட்டு அரைத்துக் கொள்ளவும்.

கடாயில், வரகு அரிசி மாவு சேர்த்து ஐந்து நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும். 

அதனுடன், தேவையான அளவு உப்பு, 1/4 கப் துருவிய தேங்காய், 20 கிராம் முந்திரி, இரண்டு ஸ்பூன் நெய், 1/4 கப் வெந்நீர் சேர்த்து உதிரியாக பிசைந்து கொள்ளவும். 

பின்னர், இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

கடாயில், நான்கு ஸ்பூன் நெய், 1/2 ஸ்பூன் சோம்பு, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, 1/4 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி மூன்றும் சேர்த்து 1/2 கப், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். 

பின், 1/2 டம்ளர் தண்ணீர், 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து தண்ணீர் சுண்டிய உடன், வேக வைத்துள்ள புட்டு மாவை பொடித்து விட்டு இதனுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். 

இறுதியாக, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
Previous Post Next Post