சேனைக்கிழங்கு ஃப்ரை

தேவையான பொருட்கள் 

  • சேனைக்கிழங்கு
  • மிளகாய் தூள்
  • சிக்கன் மசாலா தூள் 
  • கறி மசாலா தூள் 
  • மஞ்சள் தூள் 
  • உப்பு 
  • எண்ணெய் 
  • கொத்தமல்லி இலை 


செய்முறை

முதலில், 200 கிராம் தோல் நீக்கி பொடியாக வெட்டிய சேனைக்கிழங்கை தண்ணீரில் சேர்த்து ஒரு கொதி கொதிக்க வைத்து, தண்ணீரை வடிகட்டி விட்டு எடுத்துக் கொள்ளவும். 

கடாயில், 20 மில்லி எண்ணெய், வேக வைத்துள்ள சேனைக்கிழங்கு, ஒரு ஸ்பூன் மிளகாய் ‌தூள், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு சூடானவுடன் அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடம் ஃப்ரை செய்யவும்.

இறுதியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.

Previous Post Next Post