தேவையான பொருட்கள்
- வாழைக்காய்
- மிளகாய் தூள்
- சிக்கன் மசாலா தூள்
- கறி மசாலா தூள்
- மஞ்சள் தூள்
- உப்பு
- எண்ணெய்
- கொத்தமல்லி இலை
செய்முறை
கடாயில், 20 மில்லி எண்ணெய், இரண்டு தோல் நீக்கி மெல்லிசாக நறுக்கிய வாழைக்காய், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு சூடானவுடன் அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடம் ஃப்ரை செய்யவும்.
இறுதியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
