தேவையான பொருட்கள்
- இட்லி அரிசி
- பச்சரிசி
- உளுந்து பருப்பு
- பொட்டுக்கடலை
- காய்ந்த மிளகாய்
- பெருங்காயம்
- நல்லெண்ணெய்
செய்முறை
ஒரு கிலோ இட்லி அரிசி, 100 கிராம் பச்சரிசி சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து விட்டு நன்கு காய வைத்து எடுத்துக்கொள்ளவும்.
கடாயில், 50 கிராம் உளுந்து பருப்பு சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், 20 கிராம் பெருங்காயம் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
இவற்றை காய வைத்துள்ள அரிசியுடன் சேர்த்து மேலும், தேவையான அளவு காய்ந்த மிளகாய், 200 கிராம் பொட்டுக்கடலை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.
தேவைக்கேற்ப தயார் செய்து வைத்துள்ள மாவுடன், எள், ஓமம், உப்பு சேர்த்து பிசைந்து முறுக்கு செய்யலாம்.
