தேவையான பொருட்கள்
- கம்பு
- கேரட்
- பீன்ஸ்
- பச்சை பட்டாணி
- தக்காளி
- பெரிய வெங்காயம்
- காய்ந்த மிளகாய்
- சோம்பு
- மஞ்சள் தூள்
- நல்லெண்ணெய்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
அடி கனமான பாத்திரத்தில், 20 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, ஐந்து காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, நீளமாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும்.
மேலும், பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி மூன்றும் சேர்த்து 1/2 கப் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
பின்னர், 30 நிமிடம் ஊற வைத்த இரண்டு டம்ளர் உடைத்த கம்பு, ஐந்து டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.
கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து தண்ணீர் சுண்டி வரும் வரை வேக வைக்கவும்.
இறுதியாக, சிறிதளவு கொத்தமல்லி இலை, நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து விடவும்.
.png)