தினை பொங்கல்

தேவையான பொருட்கள் 

  • தினை அரிசி 
  • பாசிப்பருப்பு
  • மிளகு 
  • சீரகம்
  • முந்திரி 
  • நெய் 
  • உப்பு 
  • கறிவேப்பிலை

செய்முறை 

அடி கனமான பாத்திரத்தில், ஒரு டம்ளர் பாசிப்பருப்பு, இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைக்கவும். 

பின், 30 நிமிடம் ஊற வைத்த தோல் நீக்கிய தினை இரண்டு டம்ளர், மூன்று டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து ஐந்து நிமிடம் வேக வைக்கவும். 

மற்றொரு கடாயில், ஐந்து ஸ்பூன் நெய், இரண்டு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் மிளகு, 20 கிராம் முந்திரி, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து நெய்யில் வறுத்து தயார் செய்து வைத்துள்ள பொங்கலுடன் சேர்த்து கலந்து விட்டு ஐந்து நிமிடம் வேக வைக்கவும். 

இறுதியாக, நான்கு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விடவும்.
Previous Post Next Post