தேவையான பொருட்கள்
- தனியா
- அரிசி
- கடலைப்பருப்பு
- உளுந்து பருப்பு
- கடுகு
- காய்ந்த மிளகாய்
- சாதம்
- நல்லெண்ணெய்
- உப்பு
- கறிவேப்பிலை
செய்முறை
கடாயில், ஐந்து ஸ்பூன் தனியா, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் அரிசி, 1/2 ஸ்பூன் உளுந்து பருப்பு, 1/2 ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, இரண்டு காய்ந்த மிளகாய் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து பொன்னிறமாக வறுத்து, ஆறிய பின், அரைத்துக் கொள்ளவும்.
பின், ஒரு கப் சாதத்துடன் தயார் செய்து வைத்துள்ள பொடி, தேவையான அளவு உப்பு, இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து விடவும்.
