தேவையான பொருட்கள்
- தக்காளி
- சின்ன வெங்காயம்
- தனியா தூள்
- சீரகம்
- சோம்பு
- காய்ந்த மிளகாய்
- சிக்கன் மசாலா தூள்
- கறி மசாலா தூள்
- மிளகாய் தூள்
- மஞ்சள் தூள்
- அரிசி
- தேங்காய்
- உப்பு
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, ஐந்து தக்காளி, 50 கிராம் சின்ன வெங்காயம், நான்கு காய்ந்த மிளகாய், ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் அரிசி, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
ஐந்து நிமிடம் வதங்கிய பின், இரண்டு ஸ்பூன் தனியா தூள், 1/4 கப் துருவிய தேங்காய் சேர்த்து கலந்து விட்டு, ஆறிய பின், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
மற்றொரு கடாயில், நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, சிறிதளவு கறிவேப்பிலை, அரைத்து வைத்துள்ள விழுது, இரண்டு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை கொதிக்க வைக்கவும்.
இறுதியாக, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
