தேவையான பொருட்கள்
- சப்பாத்தி
- கேரட்
- பீன்ஸ்
- பச்சை பட்டாணி
- பெரிய வெங்காயம்
- தக்காளி
- பச்சை மிளகாய்
- மிளகாய் தூள்
- மிளகுத்தூள்
- கறி மசாலா தூள்
- இஞ்சி-பூண்டு விழுது
- மஞ்சள் தூள்
- கடுகு
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது , 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
பின், 1/2 கப் கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி (மூன்றும் சேர்த்து) சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
பின்னர், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
வெந்தவுடன், பொடியாக வெட்டிய இரண்டு சப்பாத்தி, தேவையான அளவு உப்பு, சிறிதளவு கொத்தமல்லி இலை, ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறவும்.
