தேவையான பொருட்கள்
- கத்தரிக்காய்
- பெரிய வெங்காயம்
- காய்ந்த மிளகாய்
- மஞ்சள் தூள்
- மிளகாய் தூள்
- சாம்பார் தூள்
- கடுகு
- கடலைப்பருப்பு
- வெந்தயம்
- புளி
- பெருங்காயத்தூள்
- உப்பு
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
கடாயில், 20 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, 1/2 ஸ்பூன் வெந்தயம், ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய், நீளமாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், நீளமாக நறுக்கிய கத்தரிக்காய் 200 கிராம், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
பின்னர், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், இரண்டு ஸ்பூன் சாம்பார் தூள், 1/4 கப் புளிக்கரைசல், ஒரு கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடம் வேக வைக்கவும்.
இறுதியாக, 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள், சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
