கருவாடு கார குழம்பு

தேவையான பொருட்கள் 

  • கத்தரிக்காய் 
  • உருளைக்கிழங்கு 
  • கருவாடு
  • பெரிய வெங்காயம் 
  • காய்ந்த மிளகாய் 
  • மஞ்சள் தூள் 
  • மிளகாய் தூள் 
  • சாம்பார் தூள் 
  • கடுகு 
  • கடலைப்பருப்பு 
  • வெந்தயம்
  • புளி 
  • பெருங்காயத்தூள்
  • உப்பு 
  • நல்லெண்ணெய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 

செய்முறை 

கடாயில், 20 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, 1/2 ஸ்பூன் வெந்தயம், ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய், நீளமாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், நீளமாக நறுக்கிய  கத்தரிக்காய்-உருளைக்கிழங்கு 100 கிராம், 50 கிராம் சின்ன கருவாடு (15 நிமிடம் ஊற வைத்து வெந்நீரில் கழுவி), ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். 

பின்னர், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், இரண்டு ஸ்பூன் சாம்பார் தூள், 1/4 கப் புளிக்கரைசல், ஒரு கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடம் வேக வைக்கவும். 

இறுதியாக, 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள், சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
Previous Post Next Post