கோதுமை-வெஜிடபிள் கஞ்சி

தேவையான பொருட்கள் 

  • கோதுமை
  • கேரட் 
  • பீன்ஸ் 
  • சீரகம் 
  • கறிவேப்பிலை 
  • உப்பு 

செய்முறை 

1/4 கப் கோதுமையை ஒன்றிரண்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். 

பாத்திரத்தில், நான்கு கப் தண்ணீர் சேர்த்து தண்ணீர் சூடானவுடன், அரைத்து வைத்துள்ள கோதுமை, 1/4 கப் பொடியாக நறுக்கிய கேரட்-பீன்ஸ், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து வேக வைக்கவும்.

பின்னர், ஒரு ஸ்பூன் சீரகம், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
Previous Post Next Post