தேவையான பொருட்கள்
- தினை அரிசி
- கேரட்
- பீன்ஸ்
- சீரகம்
- கறிவேப்பிலை
- உப்பு
செய்முறை
1/4 கப் தோல் நீக்கிய தினை அரிசியை ஒன்றிரண்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில், நான்கு கப் தண்ணீர் சேர்த்து தண்ணீர் சூடானவுடன், அரைத்து வைத்துள்ள தினை அரிசி, 1/4 கப் பொடியாக நறுக்கிய கேரட்-பீன்ஸ், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து வேக வைக்கவும்.
பின்னர், ஒரு ஸ்பூன் சீரகம், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
