தேவையான பொருட்கள்
- இட்லி அரிசி
- கருப்பு உளுந்து
- வெந்தயம்
- ஜவ்வரிசி
- உப்பு
- நல்லெண்ணெய்
செய்முறை
இரண்டு கப் இட்லி அரிசி, 1/2 கப் கருப்பு உளுந்து (தோல் நீக்காத உளுந்து பருப்பு), இரண்டு ஸ்பூன் வெந்தயம், நான்கு ஸ்பூன் ஜவ்வரிசி சேர்த்து ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்.
பின், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு ஆறு மணி நேரம் வைக்கவும்.
பின்னர், தோசை கல்லில் ஊற்றி தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
