தேவையான பொருட்கள்
- இட்லி அரிசி
- கருப்பு உளுந்து
- வெந்தயம்
- ஜவ்வரிசி
- உப்பு
செய்முறை
இரண்டு கப் இட்லி அரிசி, 1/2 கப் கருப்பு உளுந்து (தோல் நீக்காத உளுந்து பருப்பு), இரண்டு ஸ்பூன் வெந்தயம், நான்கு ஸ்பூன் ஜவ்வரிசி சேர்த்து ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்.
பின், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு அரைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு ஆறு மணி நேரம் வைக்கவும்.
பின்னர், இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேக வைக்கும்.
