பால் அல்வா

தேவையான பொருட்கள் 

  • பால் 
  • சர்க்கரை 
  • நெய் 
  • ஏலக்காய் பொடி 
  • முந்திரி
  • வினிகர் 

செய்முறை 

அடி கனமான பாத்திரத்தில், ஒரு லிட்டர் பால் சேர்த்து, பால் சூடானவுடன், 1/2 ஸ்பூன் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து பால் திரிந்து ‌ தண்ணீர் சுண்டி வரும் வரை கலந்து விடவும். 

பின், 50 கிராம் சர்க்கரை சேர்த்து சர்க்கரை உருகி இறுகும் வரை கலந்து விடவும். 

இறுதியாக, 25 கிராம் நெய்யில் வறுத்த முந்திரி, 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி, ஐந்து ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விடவும்.
Previous Post Next Post