தேவையான பொருட்கள்
- பால்
- வெல்லம்
- நெய்
- ஏலக்காய் பொடி
செய்முறை
முதலில், பாத்திரத்தில் 100 கிராம் பொடியாக்கிய வெல்லம், 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து சூடாக்கி, வெல்லம் கரைந்த பின், வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
பின்னர், அடி கனமான பாத்திரத்தில், ஒரு லிட்டர் பால் சேர்த்து பால் சூடானவுடன், பொங்கி வராமல் கலந்து விடவும். சேர்த்த பால் பாதி அளவு ஆனவுடன், அடுப்பை மெதுவாக வைத்து இறுகும் வரை கலந்து விடவும்.
பின், வடித்து வைத்துள்ள வெல்லம் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து விடவும்.
இறுகிய பின், 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி, நான்கு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
