காலிஃப்ளவர்-மைதா ஃப்ரை

தேவையான பொருட்கள் 

  • காலிஃப்ளவர் 
  • மைதா 
  • அரிசி மாவு
  • மிளகுத்தூள் 
  • காஷ்மீரி மிளகாய் தூள்
  • கறி மசாலா தூள் 
  • காலிஃப்ளவர் சில்லி பொடி
  • தக்காளி
  • சமையல் சோடா 
  • சோம்பு 
  • உப்பு 
  • எண்ணெய் 
  • கொத்தமல்லி இலை 
  • கறிவேப்பிலை 

செய்முறை 

ஒரு கப் பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர், 1/4 கப் மைதா, இரண்டு ஸ்பூன் அரிசி மாவு, இரண்டு ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், ஒரு ஸ்பூன் காலிஃப்ளவர் சில்லி பொடி, தேவையான அளவு உப்பு, 1/4 ஸ்பூன் சமையல் சோடா, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, தண்ணீர் சேர்த்து பக்கோடா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். 

பின், பிசைந்து வைத்துள்ள மாவை சிறிது சிறியதாக எண்ணெயில் போட்டு பொரிக்கவும். 

பின்னர், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளியுடன் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். 

மற்றொரு கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், 1/2 ஸ்பூன் சோம்பு, சிறிதளவு கறிவேப்பிலை, அரைத்து வைத்துள்ள தக்காளி, ஒரு ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைக்கவும். 

பின், இரண்டு டம்ளர் தண்ணீர், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைக்கவும். 

பிறகு, இதனுடன் பொரித்து வைத்துள்ள காலிஃப்ளவர் பொடித்து விட்டு சேர்த்து ஐந்து நிமிடம் நன்கு கொதிக்க விட்டு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும். தேவைப்பட்டால் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் தூவி கொள்ளலாம்.
Previous Post Next Post