தேவையான பொருட்கள்
- கேரட்
- பீன்ஸ்
- முட்டைக்கோஸ்
- பாசிப்பருப்பு
- பெரிய வெங்காயம்
- காய்ந்த மிளகாய்
- தேங்காய்
- மஞ்சள் தூள்
- கடுகு
- சீரகம்
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
செய்முறை
கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் சீரகம், 20 கிராம் பாசிப்பருப்பு, ஐந்து காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, 1/4 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் மூன்றும் சேர்த்து 300 கிராம், தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
வதங்கிய பின், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து தண்ணீர் சுண்டி வரும் வரை வேக வைக்கவும்.
இறுதியாக, 1/4 கப் துருவிய தேங்காய் சேர்த்து ஒரு நிமிடம் கலந்து விட்டு இறக்கவும்.
