தினை தக்காளி சாதம்

தேவையான பொருட்கள் 

  • தினை அரிசி 
  • தக்காளி 
  • பெரிய வெங்காயம் 
  • காய்ந்த மிளகாய்
  • கடலைப்பருப்பு 
  • மஞ்சள் தூள்
  • கடுகு 
  • சீரகம் 
  • எண்ணெய் 
  • உப்பு 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 

செய்முறை 

அடி கனமான பாத்திரத்தில், 20 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் சீரகம், இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஐந்து காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், பொடியாக நறுக்கிய நான்கு தக்காளி சேர்ந்து வதக்கவும். 

பின்னர், 30 நிமிடம் ஊற வைத்த தோல் நீக்கிய தினை அரிசி இரண்டு டம்ளர், நான்கு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து தண்ணீர் சுண்டி வரும் வரை வேக வைக்கவும். 

இறுதியாக, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு அடுப்பை நிறுத்திவிட்டு பத்து நிமிடம் மூடி வைக்கவும். பின், சூடாக பரிமாறவும்.
Previous Post Next Post