பேரிச்சம்பழம்-நட்ஸ் பர்ஃபி

தேவையான பொருட்கள் 

  • பேரிச்சம்பழம் 
  • முந்திரி 
  • உலர் திராட்சை 
  • பாதாம் 
  • நாட்டுச் சர்க்கரை 
  • பால் 
  • நெய் 

செய்முறை 

முதலில், 50 கிராம் பேரிச்சம்பழம், 1/2 டம்ளர் பால் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். 

கடாயில், அரைத்த பேரிச்சம்பழம், 50 கிராம் நாட்டுச் சர்க்கரை, 1/2 டம்ளர் பால் சேர்த்து இறுகும் வரை கலந்து விடவும். 

பின், 1/4 கப் முந்திரி, உலர் திராட்சை, பாதாம் (மூன்றும் சேர்த்து 1/4 கப்) சேர்த்து கலந்து விடவும்.

பின்னர், நெய் தடவிய தட்டில் தயார் செய்து வைத்துள்ள கலவையை ஊற்றி, ஆறிய பின் சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
Previous Post Next Post