மீன் கார குழம்பு

தேவையான பொருட்கள் 

  • மீன் 
  • சின்ன வெங்காயம் 
  • தக்காளி 
  • மிளகாய் தூள் 
  • தனியா தூள் 
  • மஞ்சள் தூள்
  • காய்ந்த மிளகாய் 
  • புளி 
  • வெந்தயம் 
  • பெருங்காயத்தூள்
  • நல்லெண்ணெய்
  • உப்பு 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை

செய்முறை 

கடாயில், 20 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் வெந்தயம், நான்கு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, 1/4 கப் சின்ன வெங்காயம், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள், ஒரு ஸ்பூன் தனியா தூள், இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். 

பின்னர், 1/2 கப் புளிக்கரைசல், 1/2 கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். 

அதனுடன், 200 கிராம் மீன் சேர்த்து ஒரு கொதி கொதிக்க வைத்து சிறிதளவு கொத்தமல்லி இலை தூவி விடவும்.
Previous Post Next Post