தேவையான பொருட்கள்
- மரவள்ளி கிழங்கு
- சப்பாத்தி
- மிளகுத்தூள்
- தனியா தூள்
- கறி மசாலா தூள்
- சிக்கன் மசாலா தூள்
- டொமேட்டோ சாஸ்
- உப்பு
- கொத்தமல்லி இலை
செய்முறை
200 கிராம் மரவள்ளி கிழங்கை தோலை நீக்கிவிட்டு வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
மசித்து வைத்துள்ள மரவள்ளி கிழங்குடன் ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், 1/4 ஸ்பூன் கறி மசாலா தூள், 1/4 ஸ்பூன் தனியா தூள், 1/2 ஸ்பூன் சிக்கன் மசாலா தூள், தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து கலந்து விடவும்.
பின், சப்பாத்தியில், ஒரு ஸ்பூன் டொமேட்டோ சாஸ் தடவிக் கொள்ளவும். மேலும், தேவையான அளவு தயார் செய்து வைத்துள்ள மரவள்ளி கிழங்கு வைத்து ரோல் செய்யவும்.
