காலிஃப்ளவர் சப்பாத்தி ரோல்

தேவையான பொருட்கள் 

  • காலிஃப்ளவர் 
  • சப்பாத்தி
  • மிளகாய் தூள்
  • சிக்கன் மசாலா தூள் 
  • கறி மசாலா தூள் 
  • மஞ்சள் தூள் 
  • டொமேட்டோ சாஸ் 
  • சில்லி சாஸ்
  • உப்பு 
  • எண்ணெய் 
  • கொத்தமல்லி இலை 


செய்முறை 

கடாயில், 20 மில்லி எண்ணெய், 200 கிராம் நறுக்கி வெந்நீரில் கழுவிய காலிஃப்ளவர், ஒரு ஸ்பூன் மிளகாய் ‌தூள், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு சூடானவுடன் அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடம் ஃப்ரை செய்யவும்.

பின், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.

சப்பாத்தியில், ஒரு ஸ்பூன் டொமேட்டோ சாஸ், ஒரு ஸ்பூன் சில்லி சாஸ் தடவி விட்டு அதன் மேல் தயார் செய்து வைத்துள்ள காலிஃப்ளவர் வைத்து ரோல் செய்யவும்.

Previous Post Next Post