சாமை அரிசி கார புட்டு

தேவையான பொருட்கள் 

  • சாமை அரிசி 
  • தேங்காய் 
  • பெரிய வெங்காயம் 
  • பச்சை மிளகாய் 
  • கடலைப்பருப்பு
  • மஞ்சள் தூள்
  • சோம்பு
  • முந்திரி
  • நெய் 
  • உப்பு 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை

செய்முறை 

200 கிராம் சாமை அரிசியை 5 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை முழுவதுமாக துணியில் கட்டி வடித்து விட்டு அரைத்துக் கொள்ளவும்.

கடாயில், சாமை அரிசி மாவு சேர்த்து ஐந்து நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும். 

அதனுடன், தேவையான அளவு உப்பு, 1/4 கப் துருவிய தேங்காய், 20 கிராம் முந்திரி, இரண்டு ஸ்பூன் நெய், 1/4 கப் வெந்நீர் சேர்த்து உதிரியாக பிசைந்து கொள்ளவும். 

பின்னர், இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

கடாயில், நான்கு ஸ்பூன் நெய், 1/2 ஸ்பூன் சோம்பு, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, 1/4 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், வேக வைத்துள்ள புட்டு மாவை பொடித்து விட்டு இதனுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். 

இறுதியாக, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
Previous Post Next Post