தேவையான பொருட்கள்
- சுண்டைக்காய்
- சின்ன வெங்காயம்
- காய்ந்த மிளகாய்
- தனியா
- வெந்தயம்
- பெருங்காயத்தூள்
- துவரம் பருப்பு
- அரிசி
- கடுகு
- கடலைப்பருப்பு
- உளுந்து பருப்பு
- புளி
- மஞ்சள் தூள்
- உப்பு
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
செய்முறை
கடாயில், இரண்டு ஸ்பூன் துவரம் பருப்பு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு, இரண்டு ஸ்பூன் தனியா, ஆறு காய்ந்த மிளகாய், இரண்டு ஸ்பூன் அரிசி சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். ஆறிய பின், பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
மற்றொரு கடாயில், 25 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள், 1/4 கப் நறுக்கிய சின்ன வெங்காயம், சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் வறுத்து அரைத்த வெந்தய பொடி, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், ஒரு கப் சுண்டைக்காய் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
பின்னர், ஒரு கப் புளிக்கரைசல், தேவையான அளவு தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
பின்னர், வறுத்து அரைத்து வைத்துள்ள பொடி சேர்த்து கலந்து விட்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைக்கவும்.
