தேவையான பொருட்கள்
- முட்டை
- கடலை மாவு
- மைதா
- மட்டன் மசாலா தூள்
- சிக்கன் மசாலா தூள்
- மிளகாய் தூள்
- மிளகுத்தூள்
- பச்சை மிளகாய்
- பெரிய வெங்காயம்
- சோம்பு
- எண்ணெய்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில், நான்கு முட்டையை வேக வைத்து துருவி எடுத்துக் கொள்ளவும்.
பின், துருவிய முட்டையுடன் 100 கிராம் மைதா, 100 கிராம் கடலை மாவு, பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், 1/4 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா தூள், ஒரு ஸ்பூன் மட்டன் மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு, ஒரு ஸ்பூன் சோம்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
பின்னர், பிசைந்து வைத்துள்ள மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து தட்டி எண்ணெயில் போட்டு வேக வைக்கவும்.
