தேவையான பொருட்கள்
- மட்டன்
- தேங்காய்
- தக்காளி
- பச்சை மிளகாய்
- மிளகாய் தூள்
- மட்டன் மசாலா தூள்
- கறி மசாலா தூள்
- சின்ன வெங்காயம்
- இஞ்சி-பூண்டு விழுது
- சோம்பு
- மஞ்சள் தூள்
- உப்பு
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில், ஒரு கப் துருவிய தேங்காய், ஒரு ஸ்பூன் சோம்பு, 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், 20 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன் ஒரு ஸ்பூன் சோம்பு, சிறிதளவு கறிவேப்பிலை, 1/4 கப் சின்ன வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். மேலும், இரண்டு தக்காளி சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், 500 கிராம் மட்டன், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், இரண்டு ஸ்பூன் மட்டன் மசாலா தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
அதனுடன் இரண்டு கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
பின், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, தேவைப்பட்டால் மேலும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து, இறுதியாக சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
