தேவையான பொருட்கள்
- ஸ்வீட் கார்ன்
- தேங்காய்
- பெரிய வெங்காயம்
- தக்காளி
- இஞ்சி-பூண்டு விழுது
- பச்சை மிளகாய்
- மிளகாய் தூள்
- கறி மசாலா தூள்
- மஞ்சள் தூள்
- தனியா தூள்
- பொட்டுக்கடலை
- சோம்பு
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில், 20 மில்லி எண்ணெய், 1/2 கப் ஸ்வீட் கார்ன் சேர்த்து ஃப்ரை செய்யவும்.
ஒரு கப் துருவிய தேங்காய், நான்கு ஸ்பூன் பொட்டுக்கடலை, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
மற்றொரு கடாயில், 20 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, 1/4 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி, 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் தனியா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின்னர், ஃப்ரை செய்து வைத்துள்ள ஸ்வீட் கார்ன், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, சிறிதளவு தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைக்கவும்.
இறுதியாக, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
