தேவையான பொருட்கள்
- சிக்கன்
- கடலை மாவு
- மைதா
- அரிசி மாவு
- சிக்கன் மசாலா தூள்
- மிளகாய் தூள்
- மஞ்சள் தூள்
- பச்சை மிளகாய்
- பெரிய வெங்காயம்
- சோம்பு
- எண்ணெய்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில், ஐந்து ஸ்பூன் எண்ணெய், 200 கிராம் எலும்பில்லாத சிக்கன், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
பின், இரண்டு ஸ்பூன் சிக்கன் மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் விடவும்.
ஆறிய பின், சிக்கனை மசித்து அதனுடன் 100 கிராம் மைதா, 50 கிராம் கடலை மாவு, 50 கிராம் அரிசி மாவு, பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், 1/4 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு, ஒரு ஸ்பூன் சோம்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
பின்னர், பிசைந்து வைத்துள்ள மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து தட்டி எண்ணெயில் போட்டு வேக வைக்கவும்.
