தேவையான பொருட்கள்
- மீன்
- தேங்காய்
- தக்காளி
- காய்ந்த மிளகாய்
- மிளகாய் தூள்
- தனியா தூள்
- கறி மசாலா தூள்
- மீன் சில்லி பொடி
- சின்ன வெங்காயம்
- இஞ்சி-பூண்டு விழுது
- சோம்பு
- வெந்தயம்
- மஞ்சள் தூள்
- உப்பு
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில், ஒரு கப் துருவிய தேங்காய், ஒரு ஸ்பூன் சோம்பு, 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், 20 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன் ஒரு ஸ்பூன் வெந்தயம், 1/4 கப் சின்ன வெங்காயம், சிறிதளவு கறிவேப்பிலை, நான்கு காய்ந்த மிளகாய், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். மேலும், இரண்டு தக்காளி, ஒரு ஸ்பூன் மீன் சில்லி பொடி, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் தனியா தூள் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, 1/2 டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
பின்னர், 200 கிராம் மீன் சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
