சிக்கன் குழம்பு ஆம்லெட்

தேவையான பொருட்கள் 

  • முட்டை 
  • சிக்கன் குழம்பு 
  • பெரிய வெங்காயம் 
  • பச்சை மிளகாய் 
  • மிளகுத்தூள் 
  • கடலை மாவு
  • உப்பு 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 
  • எண்ணெய் 

செய்முறை 

பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். 

மேலும், இதனுடன் இரண்டு முட்டை உடைத்து ஊற்றி, 1/4 கப் சிக்கன் குழம்பு, நான்கு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து நன்கு கலந்து விட்டு தோசை கல்லில் ஊற்றி, மிளகுத்தூள் தூவி, தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
Previous Post Next Post