தேவையான பொருட்கள்
- முட்டை
- மட்டன் குழம்பு
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- மிளகுத்தூள்
- கடலை மாவு
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- எண்ணெய்
செய்முறை
பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
மேலும், இதனுடன் இரண்டு முட்டை உடைத்து ஊற்றி, 1/4 கப் மட்டன் குழம்பு, நான்கு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து நன்கு கலந்து விட்டு தோசை கல்லில் ஊற்றி, மிளகுத்தூள் தூவி, தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
