தேவையான பொருட்கள்
- சிக்கன்
- தேங்காய்
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- தக்காளி
- இஞ்சி-பூண்டு விழுது
- சிக்கன் மசாலா தூள்
- கறி மசாலா தூள்
- மிளகாய் தூள்
- மிளகுத்தூள்
- மஞ்சள் தூள்
- சோம்பு
- நல்லெண்ணெய்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
குக்கரில், 20 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, பொடியாக நறுக்கிய 1/4 கப் பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, நான்கு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர், 300 கிராம் சிக்கன், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், இரண்டு ஸ்பூன் சிக்கன் மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
மேலும், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் விடவும்.
இறுதியாக, ஒரு கப் அரைத்த தேங்காய் சேர்த்து கலந்து விட்டு ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
