தேவையான பொருட்கள்
- முட்டை
- பூண்டு
- தக்காளி
- பச்சை மிளகாய்
- மிளகுத்தூள்
- சோம்பு
- முட்டை மசாலா தூள்
- காஷ்மீரி மிளகாய் தூள்
- மஞ்சள் தூள்
- உப்பு
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில், ஐந்து முட்டையை வேக வைத்து, தோலை நீக்கிவிட்டு பொடியாக வெட்டிக் கொள்ளவும்.
கடாயில், 20 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, சிறிதளவு கறிவேப்பிலை, 1/4 கப் பொடியாக நறுக்கிய பூண்டு, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், நான்கு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின்னர், வேக வைத்துள்ள முட்டை, இரண்டு ஸ்பூன் முட்டை மசாலா தூள், ஒரு ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
இறுதியாக, இரண்டு ஸ்பூன் மிளகுத்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
