கருவாடு பூண்டு-மிளகு வறுவல்


தேவையான பொருட்கள் 

  • கருவாடு 
  • பூண்டு  
  • தக்காளி 
  • காய்ந்த மிளகாய் 
  • மிளகுத்தூள் 
  • கடுகு 
  • சீரகம் 
  • காஷ்மீரி மிளகாய் தூள் 
  • மஞ்சள் தூள் 
  • உப்பு 
  • நல்லெண்ணெய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 

செய்முறை 

சின்ன கருவாடு 200 கிராம் எடுத்து சுடு தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து கழுவி எடுத்துக் கொள்ளவும். 

கடாயில், 25 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் சீரகம், சிறிதளவு கறிவேப்பிலை, 1/4 கப் பொடியாக நறுக்கிய பூண்டு, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், நான்கு காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.‌

வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும். 

பின்னர், சுத்தம் செய்து வைத்துள்ள கருவாடு, இரண்டு ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். 

இறுதியாக, இரண்டு ஸ்பூன் மிளகுத்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
Previous Post Next Post