சிக்கன் கெட்டி குழம்பு


தேவையான பொருட்கள் 

  • சிக்கன் 
  • சின்ன வெங்காயம் 
  • பெரிய வெங்காயம்
  • தேங்காய் 
  • தக்காளி 
  • இஞ்சி 
  • பூண்டு 
  • சோம்பு 
  • கசகசா 
  • தனியா தூள் 
  • மஞ்சள் தூள்
  • சிக்கன் மசாலா தூள்
  • மிளகுத்தூள்
  • சீரகம் 
  • காய்ந்த மிளகாய் 
  • பச்சை மிளகாய்
  • நல்லெண்ணெய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 

செய்முறை 

முதலில், கடாயில் ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய்,‌ இரண்டு ஸ்பூன் சீரகம், 100 கிராம் சின்ன வெங்காயம், ஒரு தக்காளி, ஐந்து காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை,  சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், நான்கு ஸ்பூன் தனியா தூள் சேர்த்து கலந்து விட்டு இறக்கவும். ஆறிய பின், சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 

மேலும், 1/2 கப் தேங்காய் துருவல், ஒரு துண்டு இஞ்சி, நான்கு பல் பூண்டு, ஒரு ஸ்பூன் கசகசா சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து தனியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். 

குக்கரில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, 1/4 கப் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின், 500 கிராம் சிக்கன், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு ஸ்பூன் சிக்கன் மசாலா தூள், இரண்டு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். 

பின்னர், அரைத்து வைத்துள்ள வெங்காய விழுது, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.

பின், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, ஒரு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க தொடங்கியவுடன் குக்கரை மூடி போட்டு இரண்டு விசில் விடவும். 

இறுதியாக, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
Previous Post Next Post