தேவையான பொருட்கள்
- மீன்
- சின்ன வெங்காயம்
- பெரிய வெங்காயம்
- தேங்காய்
- தக்காளி
- இஞ்சி
- பூண்டு
- சோம்பு
- தனியா தூள்
- மஞ்சள் தூள்
- வெந்தய பொடி
- மீன் குழம்பு மசாலா தூள்
- வெந்தயம்
- புளி
- காய்ந்த மிளகாய்
- பச்சை மிளகாய்
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- உப்பு
செய்முறை
முதலில், கடாயில் ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய், இரண்டு ஸ்பூன் சோம்பு, 100 கிராம் சின்ன வெங்காயம், ஒரு தக்காளி, ஐந்து காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், நான்கு ஸ்பூன் தனியா தூள், 1/4 கப் துருவிய தேங்காய் சேர்த்து கலந்து விட்டு இறக்கவும். ஆறிய பின், சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் வெந்தயம், இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, 1/4 கப் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு ஸ்பூன் மீன் குழம்பு மசாலா தூள் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
மேலும், 1/4 கப் புளிக்கரைசல் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
பின்னர், அரைத்து வைத்துள்ள வெங்காய விழுது, ஒரு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும்.
பின், 300 கிராம் மீன் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன், 1/4 ஸ்பூன் வெந்தய பொடி, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
