பூண்டு தோசை


தேவையான பொருட்கள் 

  • தோசை மாவு 
  • பூண்டு 
  • இட்லி பொடி 
  • சீரகம் 
  • பெருங்காயத்தூள் 
  • மஞ்சள் தூள் 
  • நல்லெண்ணெய்
  • உப்பு 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 

செய்முறை 

கடாயில், நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சீரகம், சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய 10 பல் பூண்டு, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். 

வதங்கிய பின், 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள், தேவையான அளவு இட்லி பொடி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து விட்டு இறக்கவும். 

பின், ஒரு கப் தோசை மாவுடன் வதக்கி வைத்துள்ள பூண்டு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு‌ தோசை கல்லில் ஊற்றி தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
Previous Post Next Post