சிக்கன் ரச சூப்


தேவையான பொருட்கள் 

  • சிக்கன் 
  • சிக்கன் மசாலா தூள் 
  • கறி மசாலா தூள் 
  • மிளகுத்தூள் 
  • சீரகத்தூள் 
  • மஞ்சள் தூள் 
  • பூண்டு 
  • கறிவேப்பிலை  
  • உப்பு 
  • எண்ணெய் 

செய்முறை 

குக்கரில், 20 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், 200 கிராம் சிக்கன், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். 

பின்னர், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா தூள், பொடியாக நறுக்கிய இரண்டு பல் பூண்டு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.

பின், 300 மில்லி தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு விசில் விடவும். 

வேக வைத்த பின்னர், சிக்கனில் உள்ள தண்ணீரை மட்டும் வடிகட்டி தனியாக எடுத்துக் கொள்ளவும். 

வடிகட்டி எடுத்த சிக்கன் தண்ணீருடன், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 ஸ்பூன் சீரகத்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
Previous Post Next Post