தேவையான பொருட்கள்
- மட்டன்
- பூண்டு
- தக்காளி
- பச்சை மிளகாய்
- மிளகு
- சோம்பு
- மட்டன் மசாலா தூள்
- காஷ்மீரி மிளகாய் தூள்
- மஞ்சள் தூள்
- உப்பு
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
குக்கரில், 500 கிராம் மட்டன், இரண்டு டம்ளர் தண்ணீர், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நான்கு விசில் விட்டு, தண்ணீரை வடிகட்டி மட்டனை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், 20 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, சிறிதளவு கறிவேப்பிலை, 1/4 கப் பொடியாக நறுக்கிய பூண்டு, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், நான்கு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின்னர், வேக வைத்துள்ள மட்டன், இரண்டு ஸ்பூன் மட்டன் மசாலா தூள், ஒரு ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
வேக வைத்த மட்டனிலிருந்து வடிகட்டி வைத்துள்ள தண்ணீர் சேர்த்து தண்ணீர் சுண்டி வரும் வரை வேக வைக்கவும்.
இறுதியாக, இரண்டு ஸ்பூன் பொடியாக தட்டிய மிளகு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
