தேவையான பொருட்கள்
- மைதா
- ரவை
- பூண்டு
- காய்ந்த மிளகாய்
- இட்லி பொடி
- பெருங்காயத்தூள்
- மஞ்சள் தூள்
- உப்பு
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
கடாயில், 1/4 கப் பொடியாக நறுக்கிய பூண்டு, இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து நன்கு பொரிக்கவும்.
பின், 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
இதனுடன், நான்கு ஸ்பூன் இட்லி பொடி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில், 200 கிராம் மைதா, ஐந்து ஸ்பூன் ரவை, தேவையான அளவு உப்பு, தயார் செய்து வைத்துள்ள பூண்டு பொடி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து, 30 நிமிடம் வைக்கவும்.
பின்னர், தோசை கல்லில் ஊற்றி தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
