தேவையான பொருட்கள்
- தக்காளி
- புதினா
- பூண்டு
- சீரகம்
- மிளகு
- கடுகு
- காய்ந்த மிளகாய்
- பெருங்காயத்தூள்
- மஞ்சள் தூள்
- வெந்தயம்
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
செய்முறை
முதலில், நான்கு பல் பூண்டு, இரண்டு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம் நன்கு தட்டி எடுத்துக் கொள்ளவும்.
பின், இரண்டு தக்காளி, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைத்து நன்கு கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், 1/2 ஸ்பூன் கடுகு, 1/4 ஸ்பூன் வெந்தயம், ஒரு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு கைப்பிடி புதினா, தட்டி வைத்துள்ள மிளகு சீரகம் பூண்டு, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து நன்கு வதக்கவும்.
வதங்கிய பின், தயார் செய்து வைத்துள்ள தக்காளி, மூன்று டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன், சிறிதளவு புதினா, 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
