எலுமிச்சை-புதினா ரசம்


தேவையான பொருட்கள் 

  • எலுமிச்சை 
  • புதினா
  • பூண்டு 
  • சீரகம் 
  • மிளகு 
  • கடுகு 
  • காய்ந்த மிளகாய்
  • பெருங்காயத்தூள் 
  • மஞ்சள் தூள் 
  • வெந்தயம்
  • உப்பு 
  • எண்ணெய் 
  • கறிவேப்பிலை  

செய்முறை 

முதலில், நான்கு பல் பூண்டு, இரண்டு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம் நன்கு தட்டி எடுத்துக் கொள்ளவும். 

கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், 1/2 ஸ்பூன் கடுகு, 1/4 ஸ்பூன் வெந்தயம், ஒரு காய்ந்த மிளகாய்,‌ சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு கைப்பிடி புதினா, தட்டி வைத்துள்ள மிளகு சீரகம் பூண்டு, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து நன்கு வதக்கவும். 

வதங்கிய பின், நான்கு ஸ்பூன் எலுமிச்சை சாறு, மூன்று டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன், சிறிதளவு புதினா, 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
Previous Post Next Post